ஓடும் லாரியில் திடீர் தீ விபத்து

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார்.மண்ணச்சநல்லூர் அருகே சி் ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் திருச்சியில் இருந்து சி. ஆர். பாளையம் செல்வதற்காக தனது லாரியில் கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் பாரதிதாசன் லாரி இருந்து குதித்து உயிர்த் தப்பினார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் வந்தனர் .இதில் சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் ஸ்ரீரங்கம் தீயனைப்பு சிறப்பு நிலைய அலுவலர் கணேசன், சிறப்பு நிலைய போக்குவரத்து செந்தில்குமார், வீரர்கள் அருணாசலம், தினகரன், குமரன் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் லாரியில் டயர் மற்றும் ஒரு பக்கம் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அசம்பாவிதங்கள், உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.