திருச்சி ரயில்வே குட்செட்டில் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

0 301
Stalin trichy visit

திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக குட்ஷெட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ரெயில்வே முதுநிலை வணிக பிரிவு மேலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் விரைந்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரக்கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டி ரெயில்வே சரக்கு வேகன்களில் வரும் உரம், கோதுமை மற்றும் மத்திய தொகுப்பிற்கு கொண்டு செல்லப்படும் சிமெண்டு மூட்டைகளை இறக்க மறுத்தும், சரக்கு லாரிகள் இயக்குவதை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 450-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குட்ஷெட்டில் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் சரக்கு இறக்கும் தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாகவும், 1-ந்தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே நிர்வாகம் முன்வராவிட்டால் ஒன்றாம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவோம் எனவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித்தரப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அவர்கள் தங்களது பணிகளுக்கு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.