கூடுதல் விலைக்கு சரக்கு விற்ற டாஸ்மார்க் விற்பனையாளர் பணியிடை நீக்கம்
முசிறி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மேட்டுப்பாளையத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் விற்பனையாளராக திருச்செல்வம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் இக்கடைக்கு மது பிரியார் ஒருவர் வந்து இரண்டு பாட்டில்கள் பியர் வாங்கியுள்ளார். விற்பனையாளர் திருச்செல்வம் 2 பாட்டில்களுக்கும் தல ரூபாய் 20 சேர்த்து வாங்கியுள்ளார். இதனை வீடியோவில் பதிவு செய்த மது பிரியர் திருச்சி டாஸ்மார்க் உயர் அலுவலர்களிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் மது பாட்டில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த திருச்செல்வத்தை டாஸ்மார்க் உயர் அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மது பிரியரிடம் டாஸ்மார்க் ஊழியர் அதிக பணம் வாங்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக மாறி உள்ளது. இருபது ரூபாய் கூடுதலாக மது பாட்டிலுக்கு கட்டணம் வசூலித்த விற்பனையாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தி உள்ளது.