சபரிமலையில் தமிழக பக்தர் மீது தாக்குதல் : சபரிகிரிஷ் ஐயப்பா சேவா சங்கம் கண்டனம்
அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் தேசிய செயலாளர் தினேஷ் அளித்த அறிக்கையில்
தமிழ்நாடு தஞ்சாவூரை சேர்ந்த தயானந்தன் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பதினெட்டாம்படி ஏறும் சமயத்தில் சபரிமலையில் பணிபுரியும் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். சபரிமலையில் பணிபுரியும் காவல்துறை மனித உரிமை மீறி செயல்படுகிறார்கள். இதை அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்பா சேவா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
இதே போன்ற நிலை தொடர்ந்தால் மனித உரிமை ஆணையத்தை நாட வேண்டி இருக்கும் என்று சபரிமலையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு
இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்
தயானந்தன் தாக்கிய காவல்துறையினர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பாக வலியுறுத்திகிறோம்