திருச்சியில் டிச. 27-ல் தமிழகம் தண்ணீரில் தன்னிறை மாநாடு

0 111
Stalin trichy visit

திருச்சி நவ.14 திருச்சி பனானா லீப் கூட்ட அரங்கில் தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு கருத்தரங்கம் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் எஸ்.செந்தூர்பாரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நல்லோர் வட்டம் பாலுஒளிரும் ஈரோடு நிர்வாகிகள் அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குனர் சின்னுசாமி, எம்சிஆர் வேட்டி நிறுவனர் எம்.சி.ராபின், பனானா லீப் ஹோட்டல் நிறுவனர் மனோகரன், திருச்சி சாரதாஸ் இயக்குனர் ரோசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு கருத்தரங்கை தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் ஆலோசகர் பேராசிரியர் க.பழனித்துரை
தொடங்கி வைத்து பேசுகையில், ஊழல் வேண்டாம் என தமிழக அரசு சொல்கிறது. ஊழல் இல்லாத காரணத்தால் பணம் வைத்துள்ளவர்கள் தமிழ்நாடு நோக்கி வருகிறார்கள். தனித்தனியாக சேவைகள் செய்வோர்களை ஒன்றிணைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. மக்கள் இயக்கங்களை ஏற்படுத்தும் முயற்சிகளையும் செய்து வருகிறது. ஒப்பந்தகாரர்களை நம்புவதைவிட அரசு அதிகாரிகளை இந்த அரசு நம்புகிறது. மக்கள் இந்த அரசின் பணிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசுடன் இணைந்து மக்கள் பணி செய்ய வேண்டும். கோவில்களுக்கு செய்யும் பணிகளை மக்கள் நீர்நிலைகளுக்கும் செய்ய வேண்டும். மேம்பாட்டு அரசியலில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே அரசியலமைப்பு சாசனம் மத்திய அரசையும், மாநில அரசையும், உள்ளாட்சி அமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் ஒளிருவதைப்போன்று உள்ளாட்சி அமைப்புகளும் ஒளிர வேண்டும் என்றார்.

கருத்தரங்கில் தமிழகம் தண்ணீரில் தன்னிறை மாநாடு டிசம்பர் 27-ல் திருச்சியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை புனரமைக்க மாவட்டவாரிய 100 ஆளுமைகள், 100 செயற்பாட்டாளர்களைக்கொண்ட குழு அமைத்து மக்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

நீர்நிலைகளை தூர்வார குடிமராமத்து முறையில் புனரமைக்க மக்கள் தங்களிடம் உள்ள உபகரணங்களை தாமாக முன்வந்து வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் இருந்து 108 நீர்நிலை செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுப்ரமணியம், பெருமாள் நீர்நிலைகளை புனரமைக்க தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.
தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பொறுப்பாளர் மோகனசுந்தரம் வரவேற்றார். இணை பொறுப்பாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.