‘தானா’ முளைத்த மாரியம்மன் கோவில் பால்குட விழா
மணப்பாறை அருகே தானா முளைத்த மாரியம்மன் கோவில் பால்குட விழா.
திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணப்பட்டியில் உள்ள தானா முளைத்த மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று பால்குட விழா நடைபெற்றது. சின்னமணப்பட்டியில் இருந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்துக் கொண்டு மணப்பட்டியில் உள்ள தானா முளைத்த மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
இதையடுத்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.