டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் ரவுண்டானா அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு.
திருச்சி, பிப்.1 அரியலூர் சிமெண்ட் பேக்டரியிலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று துறையூர் வழியாக நாமக்கல் சென்றது டேங்கர் லாரி துறையூர் பைபாஸ் ரவுண்டானா அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. லாரி கவிழ்ந்த விபத்தில் உள்ளே இருந்த சிமெண்ட் துகள்கள் சாலையில் கொட்டியது லாரி ஓட்டுநர் அங்கிருந்து தம்பி ஓடியதாக கூறப்படுகிறது. லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான பொழுது அருகே வேறு வாகனங்கள் வராததால் நல்வாய்ப்பாக விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்து தப்பி ஒடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். டேங்கர் லாரி ஓட்டுநர் போதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.