பைக்குகள் மோதிக் கொண்டதில் வாலிபர் உயிரிழப்பு

0 371
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 8  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் 35 வயதான சிலம்பரசன் (35) .இவர் கடந்த 6 ந்தேதி மதியம் தனது மோட்டார் பைக்கில் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கீழூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (48). எதிரே மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் ராசாம்பாளையம் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் தடுமாறி கீழே விழுந்த்த சிலம்பரசன் படுகாயமடைந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.