லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர்த்தபினார்.
சேலம் மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார். லாரி டிரைவரான இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் லோடு ஏற்றுவதற்க்காக தனது உதவியாளருடன் நாமக்கல் இருந்து புறப்பட்டு திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்பகுதியில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
			