முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பையில் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பை குடித்தெருவைச் சேர்ந்தவர் 53 வயதான செந்தில்குமார்.இவர் கடந்த இரண்டு வருடங்களாக அதிகமான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த செந்தில்குமார் தனது சித்தப்பா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.