“பேசும் கலை” பட்டயப்படிப்பு தொடக்க விழா அழைப்பிதழ்
தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் தமிழ் வளர் மையம், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை மையம் வழி நிகழ்த்தும் “பேசும் கலை” பட்டயப்படிப்பு தொடக்க விழா டிசம்பர் மாதம் 11-ஆம் நாள், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் படிப்பு துவக்க விழாவிற்கான அழைப்பிதழை கே.கள்ளிக்குடி ஊராட்சித் தலைவர் கே.எஸ்.சுந்தரம் அவர்களிடம், இன்று பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் வழங்கினார்.
இவர் அறக்கட்டளை வளாகத்தில் “குறளாலயம்” உயர்ந்து எழ வேண்டும் என்பதற்காக ஆழ்குழாய் அமைத்துத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.