நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

0 584
Stalin trichy visit

திருச்சி மாதுளங்கொல்லை அக்ரஹாரம் அருகே உள்ள காவிரி ஆற்று படித்துறையில் புனித் சாகர் அபியான் என்கிற நிகழ்ச்சிக்காக, அரியமங்கலம் சேஷசாயி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தெப்பகுளம், புத்தூர் பிசப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை NCC மாணவர்கள்  ஆசிரியர்கள் சுமார் 120 பேர்கள், 3 (TN) CTC NCC அணியைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள்; சுபேதார் தானாஜி போபன், சுபேதார் சதாசிவன் மற்றும் ஹவில்தார் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி சுகாதார அலுவலர் . கே. கார்த்திகேயன் மற்றும் திரு ம. கணேசன், தேர்வுநிலை கண்காணிப்பாளர், 3 (TN) CTC NCC ஆகியோர், லெப்டினன்ட் கர்னல் அஜய்குமார், சேனா மெடல், ஆபிசர் கமாண்டிங், அவர்களின் வழிகாட்டுதலோடு செய்திருந்தனர்.

முன்னதாக, தெப்பக்குளம் பிசப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவர்கள், என்.சி.சி.ஆபிசர்கள், பிரேம்குமார் மற்றும் மென்டோன்சா தலைமையில், ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பொது சுகாதாரம், நீர்நிலைகளை பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை, பிட் நோட்டீஸ்கள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.