நூல் பல கல் மாத இதழ் வெளியீடு

0 368
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நூல் பல கல் மாத இதழ் கிளை நூலக செயல்பாட்டினை தாங்கி வருகிறது. நூல் பல கல் நவம்பர் மாத இதழினை கிளை நூலக வாசகர் வட்டத் தலைவரும் இதழ் ஆசிரியருமான விஜயகுமார் வெளியிட திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். இது குறித்து நூல் பல கல் இதழ் ஆசிரியரும் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவருமான விஜயகுமார் பேசுகையில், புத்தகங்கள் நமது ஒப்பற்ற ஆசனாக செயல்படுகின்றன. நல்ல நூல்களே நல்ல நண்பர்கள். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் சுய கல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்க வேண்டும். தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வகையில் திருச்சி புத்தூர் கிளை நூலக செயல்பாட்டினை நூல் பல கல் இதழ் செய்தியாக தாங்கி வெளிவருகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.