வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டியில் நீண்ட நாட்களாக வயிற்றில் இருந்த கல்லால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி 34 வயதான மேகலா் இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றில் கல் இருந்ததால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி அதிகமாக வலி ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்து பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.