கிணற்றில் தவறி விழுந்த சிறுவன். உயிருடன் மீட்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்சீலி அருகே மூவராயண்பாளையத்தில் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
திருப்பைஞ்சீலி அருகே மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் 14 வயதான புகழேந்தி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன். இந்நிலையில் வீட்டிற்கு அருகாமையில் இருந்த 60 அடி ஆழமுள்ள விவசாயி கிணற்றில் எதிர்பாராதமாக தவறி விழுந்தார்.அப்போது ஒரு மரக்கிளையை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தார். இதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த கோபால் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலைய போக்குவரத்து ரவிக்குமார், முன்னணி தீயணைப்பு வீரர் சூசை மைக்கேல்ராஜ், வீரர்கள் விக்னேஷ், கார்த்தி, பெரியசாமி, சபாபதி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.