தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

0 253
Stalin trichy visit

திருச்சி தென்னூர் நடுநிலை பள்ளியில் முப்பதாவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. முப்பதாவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது குறித்த மைய கருப்பொருளில் நடைபெற்றது.
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தன்யா, மாணவர் யுகேந்திரன், ஏழாம் வகுப்பு மாணவி ஆபரின் பானு உள்ளிட்டோர் ஆரோக்கியம் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப்பது என துணை கருப்பொருளில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார்கள். கட்டுரை சமர்ப்பித்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விமலா திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக நூலகர் புகழேந்தி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கர் தலைவர் சாயிதா பானு உள்ளிட்டோர் முன்னிலையில் சான்றிதழ்களை வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.