கொரோனாவால் தாயை இழந்த குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பெண் காவலர்.

0 467
Stalin trichy visit

.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஓமாந்தூர் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தாயை இழந்த குழந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மணச்சநல்லூர் பெண் காவலர்.

மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காக்கி கவசங்கள் என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை வாரம்தோறும் அக்குழந்தைகள் குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பெண் காவலர்கள் நேரில் சென்று சந்தித்து உரையாடி அவர்களிடம் உரையாடி பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓமந்தூர் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்கச் சென்றபோது தாயாரை இழந்த 6 வயதான தனீஷ்கா என்பவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மனச்சநல்லூர் பெண் காவலர் சந்தியா அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வித்துள்ளார். இதை அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் தாயாரை இழந்த சிறுமிக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்பட்ட பெண் காவலரை வெகுவாக பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.