வீட்ல இருக்க வேஸ்ட் பொருளை கொடுத்து காசா ஆக்குங்க… மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!

0 1,368
voc

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர் சுய உதவி குழு மூலம் நேரடியாக வீடு வீடாக சென்று வாங்கும் புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி மணி பின் இணைந்து கிலோ 12 ரூபாய்க்கு பிளாஸ்டிக் பொருட்களை வாங்குகின்றனர்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

இதில் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள் மற்றும் இதர பிளாஸ்டிக்கால் ஆன பொருள்கள் புத்தகம் மற்றும் விதமான அட்டை பெட்டிகள், இரும்பு அலுமினியம், எவர்சில்வர் மற்றும் இதர உலோகத்தாலான பொருள்கள், பழைய டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் மின்விசிறி கம்ப்யூட்டர்ஸ் மொபைல் மற்றும் இதர மின்சாதனப் பொருள்கள் என அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளில் வந்து வாங்கிக் கொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு 83468 68686 என்ற எண்ணை தொடர்புகொண்டு கேட்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!