பள்ளி மேற்கூறை உடைந்து விழுந்து சிறுமி காயம்..

0 318
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் புலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பெரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணியம்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார்100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், மாலை நேரத்தில் பகுப்பு கட்டிடத்தில் இல்லம் தேடி கல்வி பயிற்சி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இங்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதீஷ்கா மாலை வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது
பள்ளியில் படிக்கும் சிறுமி தலையில் பள்ளியின் மேற்கூறையின் காங்கிரிட் இடிந்து
விழுந்ததால் சிறுமி தலையில் காயம் ஏற்பட்டது.

மாணவியின் தந்தை ரமேஷ் அருகில் உள்ள ஓமாந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக குழந்தை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தால் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு அதிகப்படியாக எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து
இப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளி கூட த்திற்கு அனுப்ப அச்சத்தில் உள்ளனர். சமூக ஆர்வலரின் முயற்சியால் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு முசிறி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் லால்குடி கல்வி அலுவலர் பள்ளி கட்டிடத்தின் தரத்தை உறுதி செய்தனர். அப்போது பள்ளி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழும் சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தனர். இதனை உடனடியாக மராமத்து பணி செய்து தருவதாக உறுதி அளித்து சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.