குடும்பப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

0 367
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பம்பரம் சுற்றியில் குடும்பப் பிரச்சினையில் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

லால்குடி அருகே பம்பரசுற்றி மாதா கோவில் சேர்ந்தவர் 30 வயதான டியோடர். இவர் திருச்சி பொன்மலை ரயில்வே துறையில் மெக்கானிக் உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார்.
குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதனால் இவரது மனைவி கடந்த ஒரு மாதமாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதில் மனம் உடைந்த டியோடர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கவனித்த அவரது குடும்பத்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.