தீக்குளித்து தற்கொலை திருநங்கையின் அடையாளம் தெரிந்தது

0 444
Stalin trichy visit

திருச்சி, நவ.18 வெங்கங்குடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட திருநங்கையின் அடையாளம் காவல்துறையினர் விசாரணையில் தெரிந்தது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கிழக்குத் தெருவில் திருநங்கை ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததார். கடந்த 15 ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அவர் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கம் பொதுமக்கள் அந்த திருநங்கையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் மேற்கொண்டு அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திருநங்கை கடந்த 16 ஆம் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து. வந்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட திருநங்கை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மலவராயன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்கின்ற 28 வயதான வெண்பா என தெரியவந்தது. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து விட்டதாக கூறப்படுகிறது. உடற்கூறு ஆய்விற்குப் பின் அவரது தந்தை மாணிக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.