கலைஞருக்கு சிறப்புமிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும் : மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் வலியுறுத்தல்

0 305
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா முன்னிலையில் இன்று 30.11.2023 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.நாராயணன் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் ,  துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

இக்கூட்டத்தில் 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பேசுகையில், மாபெரும் இயக்கமாம் திராவிட முன்னேற்ற கழகம் எனும் சமூக நீதிக்கான இயக்கத்தை ஏறக்குறைய 80 ஆண்டு காலம் பொது வாழ்க்கைக்கான சொந்தக்காரர் தமிழினத் தலைவர் தன்னிகரற்ற தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க மாமன்றத்தில் அவருக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தகைய சிறப்புமிகு திருச்சிராப்பள்ளி மாமன்றத்தில் அவருக்கான அடையாளத்தை நிறுவி, அதனை முதன்மையாக செய்த ஒரு மாநகராட்சி நாம் என்பதை தமிழ்நாட்டிலே நிறுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்,

மேலும் எனது வார்டில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளதால் உடனடியாக தண்ணீர் தொட்டி கட்டித் தர வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்,

காவேரி நகரில் சிதலமடைந்துள்ள சத்துணவு கூடத்தை மறுசீரமைப்பு செய்திட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,

சர்வீஸ் ரோடு அமைந்துள்ள வடிகால் பாலம் மிகவும் சிதலமடைந்துள்ளதால் அதனையும் கட்டி தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
நன்றி.

Leave A Reply

Your email address will not be published.