சட்டப்பேரவை பொது கணக்கு குழு திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு…

0 73

சட்டப்பேரவை பொது கணக்கு குழு பேரவை தலைவர் அடங்கிய குழு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு – அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளை ஆய்வு செய்த குழு பொது மக்களிடம் சிகிச்சை மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர் ….

சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்கின்றனர் – தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர் – இந்த ஆய்வில் குழுவின் உறுப்பினர்களான வேல் முருகன்,சிந்தனை செல்வன்,சரஸ்வதி உள்ளிட்ட குழுவின் இதில் உறுப்பினர்கள் உள்ளனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளுக்கு நேரடியாக சென்ற பொது கணக்கு குழு மருத்துவ சிகிச்சை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நிறை குறைகளை கேட்டறிந்தனர்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Psr Trust

இதனைத் தொடர்ந்து கோ – அபிஷேகபுரம் பகுதியில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறையின் கீழ் பணியாற்றும் பெண்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தனர் –

மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பு, நாட்டுக் கோழிகள் வளர்ப்பு, மீன்கள் வளர்ப்பு, காய்கறித் தோட்டம் அமைத்தல், காளான் பண்ணை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்தல், மாட்டுத்தீவனச் செடிகள் பயிரிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சிறந்த முறையில் பண்ணையத்தினைப் பராமரித்திட ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் – இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!