மாணவர்களின் சிறார் நூல் விமர்சன விழா…

0 131

பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கம், திருச்சி மாநகர கிளை சார்பாக மாணவர்களின் சிறார் நூல் விமர்சன விழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் “வாசிப்பு மாரத்தான்” போட்டியில் பங்கேற்ற 85 மாணவர்கள் அவர்கள் வாசித்த நூல் குறித்து விமர்சனம் செய்தனர். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், கவிஞர் ஜே.ஜே.அனிட்டா  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். இந்நிகழ்வினை கவிஞர் கார்த்திகா கவின்குமார்  ஒருங்கிணைத்து , வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை து.இராஜ ராஜேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று , வாழ்த்துரை வழங்கினார். வாசிப்பு மாரத்தானில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் மூலம் இவ்விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!