கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

0 284
Stalin trichy visit

 

திருச்சி.ஆக.23  திருச்சி கீழக்குறிச்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (48). இவர் தென்னூர் மின்வாரிய துறையில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் நேற்று சத்திரம் கே.டி ஜங்சன் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் மது அருந்துவதற்காக ரூ.500 பணம் தரும்படி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து பார்த்தசாரதி உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து  திருவானைக்கோவில் ஒத்த தெரு பகுதியை  சேர்ந்த  சூரியகாந்த்  (21) என்ற வாலிபரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.