வாக்காளர்பதிவு அலுவலரிடம் ஆவணங்களை சமர்பித்து பெயரை உறுதிப்படுத்திய அமைச்சர்
திருச்சி, நவ.17 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது இல்லத்திற்கு வருகை தந்த, வாக்காளர் பதிவு அலுவலரிடம் (பி.எல்,ஒ), தனது ஆவணங்களை முறையாக சமர்ப்பித்து, திருவெறும்பூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் தனது பெயரை உறுதிப்படுத்தி கொண்டார்.
திருச்சி 147-திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் விஸ்வாஸ் நகர் பகுதியில் வசித்து வரும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டிற்கு, எஸ்.ஐ.ஆர்இன் கீழ் பாக எண்-147க்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் நேற்று வருகை தந் தார். அவரிடம் தனது ஆவணங்களை சமர்ப்பித்து, திருவெறும்பூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் தனது பெயரை அமைச்சர் உறுதிப்படுத்திக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது மாநகரக்கழக செயலாளர் மதிவாணன் பகுதிச் செயலாளர் விஜயக்குமார், வட்ட செயலாளர் சண்முகம் மற்றும் பாக முகவர் மற்றும் பாக டிஜிட்டல் முகவர் ஆகியோர் உடன் இருந்தனர்.