பழிக்குப்பழியாக வாலிபரை தீர்த்துக்கட்டிய கும்பல்

0 452
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை (என்கிற) நொண்டி குழந்தை இவரது மகன் பெலிக்ஸ்ஜான்சன்(வயது 28) என்பவர் நேற்று மாலை ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் வழிமறித்து சராமரியாக வெட்டியுள்ளனர். இதில் பெலிக்ஸ்ஜான்சன் முகம் சிதைந்துபோனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பெலிக்ஸ் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரனையில்
கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலை பட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி அலெக்ஸின் தம்பிதான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சின்ராசு கொலை செய்யப்பட்டபோது அவரது நண்பர்கள் விரைவில் என்று போஸ்டர் அடித்து இருந்தனர். இது சம்பந்தமாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.

அதனால் இந்தக் கொலை பழிக்குப் பழி நடந்திருக்குமோ என்ற கோணத்தில் திருவெறும்பூர் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் திருச்சி எஸ்.பி. சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தார். குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதேபோல் நேற்று மதியம் ஆலத்தூர் அருகே தனியார் பைனான்ஸ் ஊழியரை மிளகாய் பொடி தூவி வாலிபர்கள் வெட்ட முயற்சி செய்த அந்தப் பகுதியிலேயே மாலையில் கொலை நடந்திருப்பது திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.