புதிய உழவர் சந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

0 255
Stalin trichy visit

திருச்சி,டிச.7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை தொடங்கி வைத்தார்கள். இதனையொட்டி திருச்சி மண்ணச்சநல்லூர் புதிய உழவர் சந்தையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர் வேளாண் வணிகம் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஸ்ரீதர், விவசாய பெருமக்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.