நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார வாகனம் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, பிப். 24 திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தை தொடங்கும் விதமாக தமிழகத்தின் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திராவிட மடல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் தெற்கு மாவட்ட மலைக்கோட்டை பகுதி ஷோபிஸ் கார்னர் பகுதியில்
பிரச்சார வாகனத்தை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட நகர் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்