பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது
திருச்சி, பிப்.2 திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் போது தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு சிவவிடுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவர்தனது பாஸ்போர்ட்டில் 6- ஆம் பக்கத்தில் திருத்தம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமான நிலைய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.