வாரியத்தலைவர் பதவி எதிர்பாராத ஒன்று கு.ப.கிருஷ்ணன் பேட்டி

0 159
Stalin trichy visit

திருச்சி மே 23 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று  குமரன் நகரில் உள்ளே அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக என்னை முதல்வர் நியமனம் செய்துள்ளார்.  இது நான் எதிர்பாராத ஒன்று நான் லால்குடியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு சதவீதத்தில் தோல்வி அடைந்திருந்தாலும், இந்த பதவியை வழங்கி இருக்கிறார்.

எல்லா எல்லோருக்கும் பதவி வழங்கியுள்ள நிலையில் எங்களுடைய சமுதாயத்திற்கு வழங்கவில்லை என்ன ஒரு கேள்வி இருந்தது இதனை கருத்தில் கொண்டு சமூகத்தினர் வைத்திருக்கின்ற கோரிக்கைக்கு பதவி கிடைத்திருக்கிறது.

மனிதன் வெற்றி நோக்கி போகும்பொழுது நிச்சயமாக வெற்றி பெறுவேன் என செல்ல வேண்டும். மன்னன் பேரரசு முத்தரையர் தனது போருக்குச் செல்லும் போதெல்லாம் வாகை சூடி வாகை பூவோடு சென்றான். அதனைக் குறிப்பிட்டு வாகை பூவை கொடியில் லட்சணையாக வைத்திருக்கிறார்.

திருச்சி எதிர்பார்த்த நிலையில் வாரியத் தலைவர் கொடுத்திருக்கிறார் என்ற கேள்விக்கு …..

தேர்தல் வர ஆறு மாதம் ஆகும் அதுவரை சோர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த பதவியை கொடுத்திருக்கிறார்.

கிழக்கு தொகுதி கூட்டணி கட்சி போட்டியிடுவதுகுறித்த கேள்விக்கு ……
அது தலைமை எடுக்க வேண்டும்.

ஒரு ஆட்சி பொறுப்பேற்று 15நாள் கூட ஆகவில்லை அதற்குள் ஒரு ஆட்சியைப் பற்றி எதிர்க்கட்சி விமர்சனம் செய்வது, எதிர்க்கட்சி கூட இல்லையா மைனாரிட்டி கட்சி இன்று தமிழகத்தில் இருப்பது அனைத்தும் மைனாரிட்டி கட்சிகள். இந்த மைனாரிட்டி கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று சொன்னால் அண்ணாவை போற்றுவதற்கு தகுதி இல்லாமல் போய் விடுகிறார்கள்.

ஒரு எதிர்க்கட்சி என்பது பானையிலே கொதிக்க கூடிய ஒரு சோறை அகப்பையில் எடுத்து பதமாக வெந்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் பணி தான் எதிர்க்கட்சி உடைய வேலை,இவர்கள் பானையை உடைக்க பார்க்கிறார்கள் இதற்கு அனுமதிக்க மாட்டோம்.

திமுக கோட்டை காவிரி டெல்டா மாவட்டம் என்று சொன்னவர்கள் ஒன்பது தொகுதியைக் கொண்ட திருச்சி மாவட்டத்தில் எத்தனை இழந்திருக்கிறார்கள்? அது எங்களுடைய அல்லவா.மூன்று தொகுதியைத் தான் கொடுத்துள்ளோம். ஆறு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம்.இது என்னுடைய வளர்ச்சி இல்லையா என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.