தனியார் நிதி நிறுவனம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

0 367
Stalin trichy visit

காட்டூரில் அடமானம் வைத்த பத்திரத்தை தர மறுக்கும் நிதி நிறுவனம். விரக்தியில் குடும்பத்துடன் நேற்று தீக்குளிக்க முயற்சி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் கடன் தொகை முழுவதையும் செலுத்தியும், அடமானம் வைத்த பத்திரத்தை தர மறுக்கும் நிதி நிறுவனத்தின் முன்பு வாலிபர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லால்குடி அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன்.
இவரது மனைவி நூர்ஜகான்.வயது(50) இவரது மருமகன் ரபீக்.
லால்குடி பரமசிவபுரம் 5 வது குறுக்குத் தெருவில் உள்ள கிராமசக்தி என்ற தனியார் நிதி நிறுவனத்தில், நூர்ஜகான் தனது வீட்டை அடமானம் வைத்து 2016 ம் ஆண்டு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். இதனை ஒவ்வொரு மாதமு‌ம் ரூ. 9 ஆயிரம் 400 என 66 மாத தவணை முறையில் கடனை செலுத்தி விட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடன் தொகை அனைத்தையும் செலுத்தி விட்டதால், நிதி நிறுவனம் நூர்ஜகானிடம் பணம் திட்டத்திற்காக
ரசீது வழங்கியது.
இதையடுத்து, அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை நிதி நிறுவனத்திடம் கேட்ட போது, சம்மந்தப்பட்ட ஊழியர்கள் முறையான பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த நூர்ஜகானின் மருமகன் இன்று மதியம் பெட்ரோல் கேனுடன் தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று, அலுவலகத்துக்கு முன்பு
தீக்குளிக்க முயற்சி செய்தார். தகவலறிந்த லால்குடி எஸ்ஐ மணி மற்றும் போலீசார் விரைந்து சென்று நூர்ஜகான்
குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை, நடத்தி நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அ
ப்போது, இன்னும் 15 நாட்களில் அடமானம் வைத்த பத்திரத்தை திரும்பி ஒப்படைப்பதாக நிதி நிருவத்தினர் எழுதி கொடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.