பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

0 434
Stalin trichy visit

திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஏரிக்காடு இங்கு வசிப்பவர் ராஜேஸ் (வ35) இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேவதி என்கின்ற மனைவியும் தன்யாரீ (9), கீர்த்தி(2) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளன ராஜேஷ் வழக்கம் போல் லாரி ஓட்டும் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்ஆகிய மூவரும் நேற்றிரவு ஓட்டு வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது, நள்ளிரவில் ஓடுகள் முறியும் சப்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அலறியடித்தபடி ரேவதி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.இதில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், ஏர்கூலர், பாத்திரங்கள் உள்பட தளவாட சாமான்கள் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக ரேவதி மற்றும் குழந்தைகள் உள்பட மூவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.