கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவனை சாப்பிடவிடாமல் வெளியில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகம்

0 472
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவனை உணவு அருந்தவிடாமல் வெளியில் நிற்க வைத்ததாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மாணவனின் தாய் புகார். விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை என ஆணையத்தின் விசாரணை அதிகாரி செய்தியாளர்களிடம் தகவல்.

கல்லக்குடியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் கல்லக்குடியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் அலுவலக உதவி பணியாளராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் இவருடைய மகன் 8 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உடன் பணியாற்றி வந்த ஆசிரியைக்கும் தமிழ்ச்செல்விக்கு கடந்த சில மாதங்களுக்கு ஏற்பட்ட தகரறில் வீட்டில் வைத்து தமிழ்ச்செல்வி ஆசிரியை தாக்கியதாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிந்து இருவரையும் அழைத்து விசாரணை செய்து இருவரையும் பள்ளியில் இருந்து நீக்கி உள்ளனர். மீண்டும் பள்ளியில் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தமிழ்ச்செல்வி கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மறுத்தால் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கல்லக்குடி காவல் நிலையத்தில் சாதியை குறித்து பேசியதாக தமிழ்செல்வி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை இல்லை என வழக்கை முடித்து உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் மகன் கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிக்கு கல்வி கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வி நிறுவனம் ஏதும் கேட்காத நிலையில் கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவனை உணவருந்த விடாமல் வெளியில் நிற்க வைத்ததாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழ்ச்செல்வி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் டெல்லி கௌரவ உறுப்பினர், குழுவின் தலைவராக டி.ஆர். ஆனந்த், என்சிபிசிஆர் மோகன், திருச்சி மாவட்ட டி.ஆர்.ஓ, ஏ.டி.எஸ்.பி லால்குடி டிஎஸ்பி, லால்குடி தாசில்தார், லால்குடி காவல் ஆய்வாளர், திருச்சி டிடிஹெல்த் புள்ளம்பாடி மருத்துவ அலுவலர் தனியார் பள்ளிகளின் டி இ ஓ, குழந்தைகள் பாதுகாப்பு துறை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் விசாரணை செய்தனர்.

விசாரணையின் முடிவில் புகாரில் உண்மையில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவனின் எதிர்காலத்தை கருதி பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டணமின்றி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கல்வியை தொடர ஒப்புதல் அளித்தனர். மேலும் பள்ளியில் பணியாற்றிய தமிழ்ச் செல்விக்கு ரூ. 42,600 நிலுவைத் தொகை வழங்கவும் பள்ளி நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக தமிழ்ச்செல்வி ஒப்புக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.