அரங்கம் அதிரட்டுமே! ‘கூலி’ ரீலிஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்
திருச்சி, ஆக.14 திருச்சியில் கூலி திரைப்படம் வெளியீடு ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படம் வெற்றி பெற வேண்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலில் வழிபாடு செய்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்திக்கொண்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள சோனா மீனா திரையரங்கின் முன் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களுக்கு பூக்களை தூவினர். அதே போல எல்.ஏ திரையரங்கின் முன் டி.ஜே அமைத்து ஆடி பாடி பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
சன் பிக்சர்ஸ், ரஜினி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூலி திரைப்படம் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் மிகுந்த எதிர்பார்ப்போடு வந்துள்ளோம் நிச்சயமாக எங்கள் எதிர்பார்ப்பு போட்டி அடையும் ரஜினியை காணவே முதல் நாள் முதல் காட்சிக்கு வந்துள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இந்த திரைப்படத்திற்கு அரசு ஏ சான்றிதழ் அளித்துள்ளது ஏ என்றால் அன்பு அனைத்து ரசிகர்களும் இத்தனை படத்தை பார்க்கலாம்.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை, சிவா, போன்ற படங்களுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படங்களில் எந்தவித ஆபாச காட்சிகளும் இருக்காது. ரஜினிகாந்த் என்றைக்குமே ஆபாசம் வன்முறை காட்சிகளில் நடிக்க மாட்டார் எனவே சிறுவர்கள் முதல் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கூலி திரைப்படத்தை கண்டு களிக்கலாம் என ரசிகர்கள் உற்சாகம்.
மேலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சோனா மீனா திரையரங்கிற்கு பூத்தட்டுகளை ஏந்தி பேரணையாக வந்த ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பிரமாண்ட கூலி பட பேனருக்கு பூக்களை தூவி, வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.