அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஆசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று இனிவரும் காலங்களில் “மாநில முன்னுரிமை(State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி-யை “தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை” ஆகியோர் சந்தித்து தங்களின் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.