நெருக்கடி நிலையால் ஜனநாயகத்தின் குரல்வலை நெறிக்கப்பட்டது : எச்.ராஜா பேட்டி

0 241
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 28 காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவெறும்பூர் அருகே பாலாஜிநகரில் உள்ள தனியார் மஹாலில் நேற்று நடந்தது.

திருச்சி மாவட்ட பாஜ தலைவர் ஒண்டிமுத்து தலைமை வகித்தார். அப்போது முன்னாள் தேசிய செயலாளர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.

காங்கிரஸ் அரசாங்கம் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரல்வலை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுவதாகவும் இந்த நெருக்கடி காலகட்டத்தில் தமிழகத்தில் டில்லி பாபு கேரளா ராஜா இப்படி பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் உடன் தற்பொழுது இன்று திமுக கூட்டணி வைத்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதார சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11 வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

உலக அளவில் இந்தியாவின் பெரிய அளவில் முன்னேறியுள்ளது என்று ஆபரேஷன் சிந்தூர் ஹீரோவாக டெக்னாலஜி உள்ளது ஜூன் 6-ம் தேதி ஆபரேஷன் செந்தூர் தொடங்கி நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது இதில் பாக்கிஸ்தான் இராணுவத்தையோ அல்லது பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை பாகிஸ்தான் ராணுவ மந்திரி போரை நிறுத்த சொல்லி கேட்ட கொண்டதால் தான் இந்தியா போரை நிறுத்தியது.

போதைப் பொருள் பல ஆயிரம் கோடிக்கு கடத்தியவர்கள் வெளியில் உள்ளனர் இன்று சினிமா உலகமே போதைப்பொருள் சிக்கியுள்ளது அந்த உலகம் ஸ்டாலின் குடும்பத்தின் கையில் உள்ளது ரெட் ஜெயன்ட் மூவி திமுக மாவட்ட இணை செயலாளராக இருந்த ஜாபர் சாதிக் ரூ.2300 கோடி அளவில் போதை பொருள் கடத்தினால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

வருங்கால சமுதாயத்தை போதைபோதைப் பொருளுக்கு அடிமையாக்கி அளிக்க பார்க்கிறது இந்த அரசுதொடர்வது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது கம்யூனிஸ்ட் கட்சி எங்கு உள்ளது என்று பிரச்சனை இல்லை அவர்கள் யார் அதிகம் தருகிறார்களோ அங்கு சென்று விடுவார்கள்

வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை உடைக்க தொடங்கியுள்ளது மதிமுக பல்லடம் தொகுதி எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டவரை தற்பொழுது தனது கட்சியின் சேர்த்துள்ளது திமுக

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வெளியே சென்ற பொழுது அப்பொழுது கலைஞர் கூடா நட்பு கேடாய் முடிந்தது  என்று  கூறினார்.  திமுக கூட்டணி உடையலாம். பாமக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பிஜேபி தான் காரணம் என செல்வ பெருந்தகை கூறியது குறித்து கேட்டதற்கு பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது கேவலமாக உள்ளது அதை அவர் செய்துள்ளார் என கூறினார்.

முன்னதாக பாஜக மாவட்ட கூட்டுறவு துறை பிரிவு தலைவர் சக்திவேல் வரவேற்றார் நிர்வாகி அன்பு லாவண்யா நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.