வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு: சிசிடிவி கேமராவில் பதிவு

0 121
Stalin trichy visit

திருச்சி, நவ.6  உப்பிலியபுரம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு

திருச்சி மாவட்டம் துறையூறை அடுத்துள்ள நாகநல்லூர் பெரிய பாலம் அருகே வசிப்பவர் நடேசன் என்பவரது மகன் குமரவேல் (40).இவர் உள்ளூரிலேயே கார் வேன் ஆட்டோ உள்ளிட்டவற்றை வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இரவு வழக்கம் போல் தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளார்.காலையில் எழுந்து வெளியில் வந்து பார்த்த பொழுது தனது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு , வீட்டில் இருந்த சிசி-டிவியில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் இரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் காம்பவுண்டு கதவைத் திறந்து இரு சக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் நள்ளிரவு வேளையில் மர்ம நபர் ஒருவர் தனது வீட்டின் வெளிப்புற கேட்டின்பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்ததை கண்டு உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.