நாய்களுக்கான சிகிச்சை மையம்: மேயர் ஆய்வு

0 152
Stalin trichy visit

திருச்சி, செப். 20 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது. தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதைத்தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இந்த மையங்களில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தெருக்களில் அடிபட்டு, நோய்வாய்ப்பட்ட தெருநாய்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன. இதுபோன்ற தெருநாய்களை மீட்டு, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புளூ கிராஸ் அமைப்பின் நிதியில் உறையூர் கோணக்கரை ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தெருநாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தெருக்களில் காயமுற்று அல்லது நோய் வாய்ப்பட்டு பரிதாபகரமான நிலையில் சுற்றித்திரியும் நாய்களை கொண்டு வந்து அவற்றுக்கு ப்ளூ கிராஸ் அமைப்பின் மூலம் சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட உள்ளது. தற்போது வரை 25 நாய்களுக்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மேயர் அன்பழகன் ஆய்வில் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.