முசிறி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

0 247
Stalin trichy visit

திருச்சி, ஆக. 17  திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள கள்ளர்தெரு மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வைத்து, மஞ்சளால் வைக்கப்பட்ட விநாயகருக்கு மலர் தூவியும், வரலட்சுமி பூஜை, மகாலட்சுமி, பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். மேலும் விவசாயம் செழிக்கவும் மழை பெய்யவும் உலக நன்மைக்காகவும் பள்ளி மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவைகள். வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.