திருச்சியில் தனியார் மருத்துவமனையில் ரூ.5.92 கோடி கையாடல் செய்ததாக 3 பேர் மீது வழக்கு

0 630
Stalin trichy visit

திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ்காலனியில் உள்ள ஏ.ஜி. கண்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சிவக்குமார்(வயது 63). இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ஏ.ஜி.கண் மருத்துவமனை நிறுவனத்தில் நிதிக்கட்டுப்பாடு மற்றும் நிர்வாக பொறுப்புகளை புத்தூரை சேர்ந்த ஆனந்தராஜா(56) என்பவர் கவனித்து வந்தார். இவர் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நிறுவனத்தின் நிதிநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பல்வேறு நபர்களுக்கு நிறுவன பணத்தை கொடுத்ததாகவும், அதன் மூலம் ரூ.5 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரத்து 888 கையாடல் நடந்துள்ளதாகவும் தெரியவந்தது. ஆகவே போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். மேலும், இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் மனுத்தாக்கலும் செய்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன், ஆனந்தராஜா(56) உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.