கஞ்சா விற்பனை செய்த மூன்று பெண்கள் கைது

0 183
Stalin trichy visit

திருச்சி ஜூலை 18- திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முதலியார் சத்திரம் பகுதி சேர்ந்த அலி பிச்சை மனைவி வினோதினி (வயது 30), குட்ஷெட் ரோடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் மனைவி தெய்வம் (வயது 37) , மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவரது மனைவி அனிதா தேவி (வயது 43) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவரிகளிடமிருந்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.