தொட்டியம், முசிறியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி,எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர்,நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 24.2.2023 வெள்ளிக்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி மின் செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
முசிறி:
அதே போல, திருச்சி மாவட்டம் முசிறி கோட்டம் 110 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான முசிறி சிங்காரச் சோலை, புதிய, பழைய பேருந்து நிலையம், துறையூர் ரோடு, தண்டலைபுத்தூர், வேலக்காநத்தம், சிங்கார சோலை, பார்வதிபுரம், அந்தரப்பட்டி வடுகப்பட்டி, காமாட்சி பட்டி ,சிந்தம்பட்டி மணமேடு, கருப்பணாம்பட்டி, அழகரை கோடியாம் பாளையம், சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலாரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் 24. 2 .2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்சார வாரிய இயக்கங்களும் காத்தலும் செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி அறிவித்துள்ளார்.