தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை

0 262
Stalin trichy visit

 

திருச்சி, பிப். 6  திருச்சி உறையூரில் தொழில் நஷ்டத்தால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி உறையூர் காவல்காரன் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 72). இவர் செங்கல் சூளை நடத்தி வியாபாரம் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த வாசுதேவன் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார் .இறந்து போன வாசுதேவனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.