திருவெறும்பூர் அருகே டிப்பர் லாரியால் சாலை அறுந்துவிழுந்த மின்கம்பிகள் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி திருவெறும்பூர் அருகே சர்வீஸ் செய்து எடுத்து வந்த டிப்பர் லாரியின் பம்பர் செயலிழந்து டிப்பர் மேலே தூக்கியதால்திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்தா மின்கம்பி அறுந்து விழுந்தது இதனால் தீப்பொறி பறந்தது பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் அதிஷ்டவசமாக லாரி டிரைவரும் அந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியில் நேற்று மாலை டிப்பர் லாரி ஒன்று பழுது நீக்கி சர்வீஸ் செய்த விட்டு திருவெறும்பூர் நோக்கி வந்தது.
அந்த டிப்பர் லாரியை நவல்பட்டு சேர்ந்த சரவணன்(37) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டை அருகே வந்த பொழுது பெல்லாரியில் உள்ள ஹைட்ராலிக் பம்ப் திடீரென தூக்கி உள்ளது இதனால் டிப்பர் தூக்கியது தெரியாமல் சரவணன் டிப்பர் லாரியை இயக்கி வந்துள்ளார் இந்தநிலையில் சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பியில் டிப்பர் லாரி உரசியது மின்கம்பியில் இதில் இருந்து விழுந்து விழுந்து அதோடு மின்கம்பம் சாய்ந்து சாய்ந்து தீப்பொறி பறந்ததுஅதன்பிறகே சரவணனுக்கு டிப்பர் தூக்கியது இந்திய வந்துள்ளது அதிர்ஷ்டவசமாக சரவணன் உயிர்தப்பிய தோடு அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அந்த பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளது.
மின்சார கம்பிகள் டிப்பர் லாரி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் அப்பகுதியில் உள்ள கடைகள் தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்து இருக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது சம்பந்தமாக துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் அப்ப போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.