கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைந்த துறைகளின் சிறப்பு முகாம்

0 318
Stalin trichy visit

திருச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைந்த துறைகளின் சிறப்பு முகாம். இலால்குடி வட்டாரத்திற்குட்பட்ட அப்பாதுரை.மாடக்குடி, கீழபெருங்காவூர், நெய்குப்பை, ஆதிகுடி, ஆலங்குடிமகாஜனம் ஆகிய கிராம ஊராட்சிகளில்
வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைளின் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வருவாய்துறை, உள்ளாட்சி துறை, கூட்டுறவுதுறை, பொதுபணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மான்ய திட்டங்கள், தொழில் நுட்ப கருத்துக்கள் எடுத்துரைத்தனர். மேலும் விவசாய பண்ணை குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கல், மானிய விலையிலான கைத்தெளிப்பான்கள், வரப்பு பயிர் சாகுபடிக்கான உளுந்து விதைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதங்கான காய்கறி விதைகள் வழங்கப்பட்டன.

நெய்குப்பை கிராம ஊராட்சியில் திருமதி. லலிதாநேரு ஊரராட்சி மன்ற தலைவர் தலைமையில் முனைவர் திரு.நா. தமிழ்செல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அதன் செயல்பாடுகள் குறித்தும், வேளாண் பல்கலை கழகத்தின் புதிய கண்டுபிப்புகள் பற்றியும், முனைவர் திருமதி. வெ. தனுஷ்கோடி உதவி பேராசிரியர் மண்வள வேளாண்மை, புதிய மக்கவைப்பான்கள் செயல்பாடுகள் குறித்தும் முனைவர் திரு.வே.குகன் தொழில்நுட்ப வல்லுநர் வானிலை திட்டம் குறித்தும், திரு. சத்தியமூர்த்தி கால்நடை உதவி மருத்துவர் கால்நடைத்துறையின் திட்டங்கள் குறித்தும் திரு. சுந்தரபாண்டியன் மற்றும் திரு.கோவிந்தராஜ் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள், உழவர் கடன் அட்டை, பயிர் கடன் வழங்கல் பற்றியும் திருமதி.விமலா துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும், திரு. சுகுமார் உதவி வேளாண்மை இயக்குநர் வேளாண்துறையின் அனைத்து திட்டங்கள் பற்றியும் திரு. சே.பி ரபிக்ஜான் துணை வேளாண்மை அலுவலர் பயிர்காப்பீடு, பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவி குறித்தும் எடுத்துரைத்தனர்.

இம்முகாம் மற்றும் கூட்ட ஏற்பாடுகளை செல்வி.கவிதா உதவி வேளாண்மை அலுவலர் -மகிழம்பாடி மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.