பலத்த காற்றால் சாலையின் குறுக்கே சாரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6பலத்த காற்றால் சாலையின் குறுக்கே சாரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி உறையூர் சாலைரோடு பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கட்டமான பணிக்காக மூங்கில்களைக் கொண்டு சாரம் கட்டப்பட்டு உள்ளது. சாரத்தில் ஏறி தினமும் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அங்கு கட்டப்பட்டிருந்த சாரம் திடீரென விழுந்தது. உறையூர் பிரதான சாலையில் அந்த சாரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்தை மாற்றி அனுப்பினர். அந்த சாரம் அங்கிருந்த மின் வயர்கள் விழுந்ததால் அவை அங்கு அறுந்து விழுந்தது. உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது. சாலையில் விழுந்த சாரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சாரம் விழுந்த பொழுது வாகனங்களில் யாரும் அங்கு செல்லவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.