ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம்
திருச்சி, ஏப்.23 திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி குழு ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று நடைபெற்றது.
இதில் ஹஜ் கமிட்டி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மொஷின்சாகிப், ராஜா முஹம்மது, சம்சுதீன், மாமன்ற உறுப்பினர் பைஸ் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஹஜ் கமிட்டி தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது. வரும் மே 26 ஆம் தேதி முதல் விமானம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா புறப்பட உள்ளது.
ஜூலை மாதம் 9 ஆம் தேதி வரை விமானங்களில் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா மக்காவை நோக்கி செல்ல உள்ளனர்.
இவர்களோடு தன்னர்வர்களும், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னார்வர்களும் ஹஜ் கமிட்டியோடு இணைந்து செயல்பட உள்ளனர். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5637 பேர் செல்ல தயாராக உள்ளனர்.
கணிசமான வகையில் பெண்களும் ஹஜ் செல்ல உள்ளனர்.கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர்.