சாலை விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

0 239
Stalin trichy visit

திருச்சி, ஏப்.23  திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி டி. வி. எஸ். டோல்கேட் வந்ததும், அரசு போக்குவரத்து பணிமனை ரவுண்டானா பகுதியில் புதுக்கோட்டை ரோட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கினார். இதில் லாரி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இறந்தவரின் உடலை மீட்டு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.