துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அயலக அணிகளின் சார்பில் பயிற்சி முகாம்

0 116
Stalin trichy visit

திருச்சி, டிச.3  DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் – கழக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக கழக இளைஞரணிச் செயலாளர்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர அயலக அணிகளின் சார்பாக பட்டதாரிகள் வெளிநாட்டுப் பணிகளுக்கு செல்வதற்கான பயிற்சி அளிக்கும் முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  கிழக்குத் தொகுதி அமைப்பாளர் சவுக்கத் அலி வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட அமைப்பாளர் அடைக்கலராஜா, மாநகர் அமைப்பாளர் இப்ராம்ஷா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வைத் தொடங்கிவைத்து விழா பேருரை ஆற்றினார் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இளைஞர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்

இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் மோகன்,  நிறைவாக தொகுதி அமைப்பாளர்கள் மகாதேவன் புவனேஸ்வரன் நன்றி கூறினார்கள். அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.